Friday, May 14, 2010













இருள்வேண்டும் தீ

காதலியுடன் தனித்திருக்க
தவித்தலைந்த நாளொன்றில்,
சிகரெட் நெருப்பிற்காய்
திறந்த தீப்பெட்டியில்,
இணைந்திருந்தன
ஈற்றிரண்டு தீக்குச்சிகள்.
மூடி இருள் தந்து
புதரொன்றில் மறைத்து வைத்தேன்.

3 comments:

  1. நவீன கவிதையின் தனித்துவமாக புதுமையான உருவகங்கள் உவமைகளை சுஜாதா நீராலானது புத்தகத்தின் முன்னுரையில் சுட்டிக் காட்டினது நினைவு வருகிறது. உங்களிடமும் சற்றும் எதிர்பாராத உவமைகள் வருகின்றன. இருளுக்குள் பதுங்கும் தீக்குச்சி, தனித்து துடிக்கும் உறுப்பு என. நிறைய எழுதுங்கள் விஜய். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கவிதை நல்லாருக்கு.word verification
    எடுத்து விடுங்கள்.

    ReplyDelete
  3. nalla kavithai, idhu ungal padaipu kaalam niraia ezhudhavum-bragadish

    ReplyDelete